Type Here to Get Search Results !

பயணிகள் முன்பதிவு பட்டியல் வெளியான பின்னரும் ரயிலில் காலி இருக்கை விபரத்தை அறியலாம்












ரயில் புறப்படும் அரைமணி நேரம் முன்பு 2வது பட்டியலும் வெளியாகும்

 ரயில்களில் இருக்கை நிலவரம் தொடர்பான முன்பதிவு பட்டியல் வெளியான பின்னரும் ரயிலில் எவ்வளவு இருக்கைகள் காலியாக உள்ளது என்ற விபரத்தை இனி பயணிகள் அறியலாம்.


 ரயில்களில் பயணிகளுக்கான இருக்கை ஒதுக்கீடு தொடர்பான பட்டியல் தயாரான பின்னர் எந்த பெட்டியில் காலியிடம் உள்ளது, தூங்கும் வசதி காலியாக உள்ளதா என்பது போன்ற விபரங்கள் டிடிஇ உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும் நிலை இருந்தது.


இதனால் படுக்கை வசதி கிடைக்காதவர்களும் பின்னர் டிடிஇயை அணுகி ரயில்களில் தங்கள் படுக்கை வசதிகளை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது.



அந்த வகையில் முன்பதிவு பட்டியல் வெளியான பின்னரும் ரயிலில் காலியான இருக்கை வசதிகள் அறியும் வசதியை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.


 ஐஆர்சிடிசி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் வழியாகவும் இது தொடர்பான விபரங்கள் பயணிகளுக்கு கிடைக்கும்.

அதில் காலியாக உள்ள பெட்டிகள், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் போன்றவற்றின் விபரங்கள் வரைபட வசதியுடன் கிடைக்கும்.


 இந்த இருக்கைகள் ஆன்லைன் வாயிலாக ரயிலில் உள்ள டிடிஇக்கள் வழியாகவும் முன்பதிவு செய்ய இயலும். பல்வேறு ரயில்களில் ஒன்பது வகுப்புகள், 120 வித்தியாசமான பெட்டிகளின் வகைகளும் வெப்சைட்டில் இடம்பெறும்.


ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் முன்பு தயார் செய்யப்படுகின்ற முதல் பட்டியலில் (சார்ட்) விபரங்கள் அப்போதே கிடைக்கப்பெறும்.


 மேலும் புதிய முன்பதிவுகள் அடிப்படையில் ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு இரண்டாவது பட்டியல் தயார் செய்யப்படும்.


 முதல் பட்டியலில் பயணிகள் டிக்கெட் ரத்து செய்ததால் ஏற்படுகின்ற காலியிடங்கள், புதிய முன்பதிவுகள் போன்றவை இரண்டாவது பட்டியலில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்


Top Post Ad