
நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்தால் வியர்க்குரு காணாமல் போகும்.
ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள… கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.
தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சருமத்தை பெறலாம்.
2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.