தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MTC, SETC, TNSTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
தமிழகத்தின் MTC, SETC, TNSTC போன்ற 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஹெவி வெகிக்கில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1.1.2025 அன்று தேதிபடி 18 மாதங்கள் கட்டாயம் பணி அனுபவம் இருக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 01.07.205 அன்று தேதிப்படி 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ் டி, பிரிவினர் என்றால், 24 முதல் 45 வயது வரை விண்ணபிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர் எக்ஸ் சர்வீஸ்மேன் என்றால் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி எஸ்க் சர்வீஸ்மேன் பிரிவினர் என்றால் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதிகள்:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 160 செண்டி மீட்டர் உயரம் உடையவராக இருத்தல் வேண்டும். இதேபோன்று குறைந்தது 50 கிலோ எடை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
நல்ல கண்பார்வை பெற்றவராக இருத்தல் வேண்டும். எவ்வித உடல் குறைபாடுகள் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, டிரைவிங் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 590 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்த பணியிடங்களுக்கு நாளை 21 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2025 ஆகும்